மசூதிக்கு வந்தும் நல்லது நடக்காததால், மசூதிக்கு வரச் சொன்னவரை காட்டுத்தனமாக கொன்ற வாலிபர்…

 
Published : Jan 27, 2017, 10:13 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
மசூதிக்கு வந்தும் நல்லது நடக்காததால், மசூதிக்கு வரச் சொன்னவரை காட்டுத்தனமாக கொன்ற வாலிபர்…

சுருக்கம்

தேன்கனிக்கோட்டை,

ஐந்து வேளை மசூதிக்கு வந்து தொழுதால் நல்லது நடக்கும் என்று மசூதிக்கு வந்தும் நல்லது நடக்காததால் மசூதிக்கு வரச் சொன்னவரை காட்டுத்தனமாக வாலிபர் ஒருவர் கொன்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டையில் உள்ள மசூதி மசூதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அஸ்கர் அலி (55) என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக தொழுகை நடத்துபவராக இருந்தார். இவர் மசூதியின் வளாகத்திலே உள்ள ஓர் அறையில் வசித்து வந்தார்.

நேற்று காலை அந்த அறையில் முகமது அஸ்கர் அலி கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவலாலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கொலை நடந்து சில மணி நேரங்களே இருக்கும் என்பதால் காவலாலர்கள் குற்றவாளியை தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு சந்தில் இளைஞர் ஒருவர் சட்டையில் இரத்த கறையுடன் பதுங்கி இருந்தார்.

காவலாளர்கள் அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அவரிடம் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தேன்கனிக்கோட்டை தேர்பேட்டையை சேர்ந்த அல்லாபகஷ் (26) என்பது தெரியவந்தது.

மேலும், இவர் தனக்கு நேரம் சரியில்லை என தினமும் மசூதிக்கு சென்று தொழுகை செய்து வந்துள்ளார். அப்போது முகமது அஸ்கர் அலி, தினமும் 5 முறை மசூதிக்கு வந்து தொழுகை செய் எல்லாம் சரியாகிவிடும் என அல்லாபகசிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் கடந்த சில நாட்களாக தினமும் 5 முறை மசூதிக்கு சென்று தொழுகை நடத்தி வந்துள்ளார்.

நேற்று மசூதிக்கு வந்த அல்லாபகஷ், இன்னும் எனக்கு எந்தவித நன்மையும் நடக்கவில்லை எனக்கூறி, முகமது அஸ்கர் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அல்லாபகஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது அஸ்கர் அலியை காட்டுத்தனமாக குத்தியுள்ளார்.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அல்லாபகஷ் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, காவலாளர்களிடம் சிக்கிக்கொண்டதாக விசாரணையில் தெரிந்தது.

பின்னர், இறந்த முகமது அஸ்கர் அலியின் உடலை காவலாளர்கள் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் இலட்சுமணன் வழக்குப்பதிவுச் செய்து அல்லாபகசை கைது செய்தார்.

மசூதி வளாகத்திற்குள் நுழைந்து தொழுகை நடத்துபரை குத்திக் கொன்ற சம்பவம் மசூதிக்கு வந்தவர்களும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் சோகத்தில் மூழ்கினர்.

 

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?