அதிகரிக்கும்  பவன்டோ குளிர்பான விற்பனை..கோக், பெப்சிக்கு பதிலாக இந்திய கூல் டிரிங்க்ஸ்…

First Published Jan 26, 2017, 3:05 PM IST
Highlights


அதிகரிக்கும்  பவன்டோ குளிர்பான விற்பனை..கோக், பெப்சிக்கு பதிலாக இந்திய கூல் டிரிங்க்ஸ்…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரலாறுச் சிறப்பு மிக்க போராட்டங்கள் நடைபெற்றன

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற இந்த அறப்போராட்டத்தின் காணமாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது.இது இளைஞர்களின் வெற்றி என அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த போராத்தின்போது மக்களிடையே வெளிநாட்டு குளிர்பானங்களுக்கும் எதிரான குரல் வலுத்தது. போராட்டத்தின்போதே பெப்சி மற்றும் கோக் குளிர் பானங்களின் விற்பனை சரியத் தொடங்கியது. ஆசிப் பிரியாணி என்ற புகழ் பெற்ற ஹோட்டல் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப் போவதில்லை என அறிவித்தது.

மேலும் வரும் மார்ச் 1ம் தேதி முதல் பெப்ஸி மற்றும் கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று வணிகர் சங்கம் அறிவித்தது.

இதனால், தமிழகத்தில் உள்ள கடைகளில் பெப்ஸி மற்றும் கோக் குளிர்பானங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இடம் தற்போது காலியாகி வருகிறது.

தற்போது அந்த இடங்களில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் காளி மார்க் நிறுவனத்தின் பவன்டோ மற்றும் டொரினோ போன்ற குளிர் பானங்கள் இடம் பிடித்துள்ளன.இவ்வகை குளிர்பானங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

வியாபாரிகளும் இனி, கோக், பெப்ஸிக்கு பதிலாக பவன்டோவை வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்துள்தாக தெரிவித்துள்ளனர்

 

 

click me!