சாப்பாட்டிற்கு அடுத்த வழி என்ன..? உச்சத்தை எட்டிய வெங்காயம் தக்காளி விலை...!

First Published Nov 13, 2017, 7:58 PM IST
Highlights
increased onion rate so high in tamil nadu


சாப்பாட்டிற்கு அடுத்த வழி என்ன..? உச்சத்தை எட்டிய வெங்காயம் தக்காளி விலை...!

சமைப்பதற்கு மிக முக்கியமான ஒன்று வெங்காயம் தக்காளி ..இவை இரண்டும் இல்லை என்றால், எதையும் சுவையாக சமைக்க முடியாது.இவை இரண்டின் விலை அதிகரித்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

சிறிய வெங்காயம்

அதிக மழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறிகளின் விலை வெகுவாக உயர்ந்து உள்ளது .அதிலும் குறிப்பாக சின்ன  வெங்காயத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ளது

எங்கு விளைகிறது ?

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ஈரோடு, தர்மபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், பல்லடம், திருப்பூர், தலைவாசல் போன்ற பகுதிகளில் அதிக அளவு விளைகிறது.

“சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால், அவை விற்பனைக்கு வரவில்லை. தற்போது சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.150 முதல் 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

ஏன் இந்த விலை உயர்வு ?

கர்நாடாகவில் பெய்த மழை காரணாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் வரத்தும் குறைந்து 10 லாரிகளில் வந்திறங்கிய சின்ன வெங்காயம் இன்று ஒரு லாரியில் பாதியளவுக்கு கூட வரவில்லை  என்பது  குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகை வரை தொடர்ந்து உயர்ந்து காணப்படும்

பெரம்பலூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் இப்போது தான் வெங்காய விளைச்சலை துவங்கி உள்ளனர்.இவை அறுவடை முடிந்து மார்க்கெட்டுக்கு வர 3 மாதங்களாகலாம். அதாவது பொங்கல் பண்டிகை வரை சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்

வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அடுத்த வேளை உணவிற்கு என்ன சமைக்கலாம்  என நினைக்கும் அளவிற்கு தற்போது காய்கறிகளின் விலை உயர்ந்து விட்டது என்றே  கூறலாம்.

எப்போது வெங்காயம் மற்றும் தக்காளி விலை குறையும் என்பதே மக்களின் ஒட்டு மொத்த கேள்வியாக உள்ளது

 

click me!