நில அதிர்வு பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பயங்கர சத்தத்தோடு வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடரும் நில அதிர்வு
பூமியின் பல பகுதிகளிலும், புவி அதிர்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனினும் அந்த அதிர்ச்சி ஓரிடத்தில் மிகுதியானால், அதைப் பூகம்பம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுவார்கள், அந்த வகையில் கடந்த சில மாதங்களாக நில அதிர்வானது நாட்டில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வருகிறது. டெல்லியை உள்ளடக்கிய வட இந்திய பகுதிகளில் அடுக்கடுக்காக ஏற்பட்ட நில அதிர்வுகள் பொதுமக்கள் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி,சென்னை உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு காணப்பட்டது. இந்தநிலையில் தற்போது திருவாரூரில் நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளியான தகவலால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
திருவாரூரில் கேட்ட பயங்கர சத்தம்
திருவாரூரில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர சத்தத்தோடு வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனையடுத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருப்போர் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் நின்றனர். இந்த பயங்கர சத்தமானது திருவாரூர் மட்டுமல்லாமல் கொரடாச்சேரி, கண்கொடுத்தவணிதம், பூந்தோட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் அருகே உள்ள மாவட்டங்களான காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்திலும் இந்த வெடி சத்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
விமான பயிற்சியால் வந்த சத்தம்
இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒருவித பதற்றமான சூழ்நிலை நிலவியது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லையென தெரிவித்தனர். தஞ்சாவூர் - கோடியக்கரை வான்வெளியில் சென்ற ஜெட் விமானம் பயிற்சி மேற்கொண்டதால் அதிக சத்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இதையும் படியுங்கள்