தமிழகத்தில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி -டெல்லியில் இருந்து குபீர் கிளப்பும் குஷ்பு

First Published Apr 25, 2017, 2:23 PM IST
Highlights
in tamil nadu admk joined with bjp-kushpu


தமிழகத்தில் நேரடியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால் அதிமுகவை பா.ஜ.க. பயன்படுத்துவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு குற்றஞ்சாட்டி உள்ளார். 

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அவர் எதிர்த்து வந்த பல திட்டங்களுக்கு இன்றைய அதிமுக அரசு பச்சைக் கொடி காட்டி வருகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம் ஆகியவை  இதற்கு சிறந்த உதாரணங்கள்.  

ஜெயலலிதா எதையெல்லாம் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் என்று அறிவித்தாரோ அதெல்லாம் தற்போது அமல்படுத்தப்பட்டு விட்டன. இதனால் தமிழக அரசின் செயல்பாடுகளில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் தலையீடு இருப்பதாக வெளிப்படையாகவே பொதுவெளியில் கருத்து எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே மத்திய அரசின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இந்தச் சூழலில் தமிழகத்தில் நேரடியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தெரிந்துவிட்டதால்  அதிமுகவை பா.ஜ.க. பயன்படுத்துவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு குற்றஞ்சாட்டி உள்ளார். டெல்லி சென்ற அவர் துணைத் தலைவர் ராகுல்காந்தியை இன்று சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தமிழகத்தில் அதிமுக பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். 

click me!