பின் சீட்டில் கணவன்... முன் சீட்டில் கள்ளக்காதலுடன் நெருக்கமாக படம் பார்த்த மனைவி... ஷாக் ஆகி சாத்து சாத்துனு சாத்திய கணவன்!

Published : Oct 15, 2018, 10:30 AM ISTUpdated : Oct 15, 2018, 10:35 AM IST
பின் சீட்டில் கணவன்... முன் சீட்டில் கள்ளக்காதலுடன் நெருக்கமாக படம் பார்த்த மனைவி... ஷாக் ஆகி சாத்து சாத்துனு சாத்திய கணவன்!

சுருக்கம்

சென்னையில் பிரபல திரையரங்கம் ஒன்றில் முன் சீட்டில் அமர்ந்து கொண்டு கள்ளக்காதலுடன் நெருக்கமாக படம் பார்த்திருந்த மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜாலியாக கள்ளக்காதலுடன் சினிமா பார்த்திருந்த போது கணவன் பார்த்ததால் திரையரங்கு வாசலிலேயே இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையை சேர்ந்தவர் பூர்ணிமா (32). இன்ஜினியர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஐடி நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய, இன்ஜினியர் மித்திரன் என்பவரை காலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் பூர்ணிமாவுக்கு தன்னுடன் வேலை செய்யும் சாரங்கன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கணவர் மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் தான் பெற்ற இரண்டு குழந்தைகளை கணவரிடமே விட்டுவிட்டு கடந்த ஓராண்டுக்கு முன் பூர்ணிமா காதலன் சாரங்கனிடம் தஞ்சமடைந்தார். 

இந்நிலையில் நேற்று மித்திரன் தனது குழந்தைகளுடன் மயிலாப்பூர் வணிக வளாகத்தில் உள்ள ஒரு திரையரங்குக்கு சென்றுள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக பூர்ணிமாவும் அவரது காதலன் சாரங்கனும் படம் பார்க்க வந்துள்ளனர். அப்போது, பூர்ணிமாவும், சாரங்கனும் தலைகளை உரசியபடி கிசு கிசு செய்து கொண்டு சினிமா பார்த்துள்ளனர்.  

இதனால் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த நபரிடம் படம் தெரியவில்லை என்று மித்திரன் கூறியுள்ளார். திரும்பி பார்த்த சாரங்கனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் மித்திரனின் மனைவியுடன் சாரங்கன் நெருக்கமாக அமர்ந்து சினிமா பார்த்து கொண்டிருந்துள்ளார். இந்த வார்த்தைகள் முற்றி இரண்டு பேரும் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, ஒருவரை ஒருவர் கடுமையாக காத்திக் கொண்டனர். ஒரு கட்டத்தில் சாரங்கனை மித்திரன் வெளுத்து வாங்கியுள்ளார். இதுகுறித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இருவரும் பரஸ்பர புகார் அளித்தனர். இருதரப்பு புகாரையும் பெற்று கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து இருவரையும் கைது செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை