விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் - ஆர்.பி.ஐ ஆளுநர் தகவல்

First Published Apr 6, 2017, 8:07 PM IST
Highlights
If the loan waiver to farmers will increase inflation - RBI Governor Information


விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால் கடன் வழங்கும் ஒழுங்குமுறை பாதிக்கும் எனவும் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறியதாவது:

விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யபட்டால் பணவீக்கம் அதிகரிக்கும்.

நேர்மையான முறையில் கடன் பெறுவதை பாதிக்கும் வகையில் விவசாய கடன் தள்ளுபடி இருக்கும்.

மேலும் கடன் வழங்கும் ஒழுங்குமுறையும் பாதிக்கும்.

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை.

ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவே தொடரும். இதேபோல், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாக தொடரும்.

ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் சரியாகி வருவதால் 2017-18 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் 7.4 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 6-12 மாதங்களில் பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்களால் அடுத்த நிதியாண்டில் வட்டி விகிதம் உயரும் என்று தெரிகிறது.

அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் முதல் அரையாண்டில் 4.5 சதவீதமாகவும், இரண்டாவது அரையாண்டில் 5 சதவீதமாகவும் இருக்கும்.

இவ்வாறு கூறினார்.

click me!