பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ...  வேலைக்கு சென்றதால் மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்!

First Published Feb 28, 2018, 6:09 PM IST
Highlights
Husbands who have been raped and assaulted by many women have gone to work


ராஜபாளையத்தை சேர்ந்தவர் நவீன்தாஸ். இவரது மனைவி கோகுலலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நவீன்தாஸ் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தார். நவீந்தாஸ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் பிரச்சினை செய்துள்ளார். மேலும் நடத்தையிலும் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கோகுலலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் 6 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். 

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோகுல லட்சுமி தளவாய்புரத்தில் உள்ள தனியார் செல்போன் கடைக்கு வேலைக்கு சென்றார். இதையறிந்த நவீன்தாஸ் மகளை வேலைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும், மீறி சென்றால் கொலை செய்து விடுவேன் என்றும் கோகுல லட்சுமியின் தாயாரிடம்  கூறியுள்ளார். இதனை பொருட்படுத்தாத கோகுல லட்சுமி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன்தாஸ் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களுடன்  மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த நவீன்தாஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கோகுல லட்சுமி பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கோகுல லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  நவீன்தாஸ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல பெண்களை கற்பழித்துக் கொன்ற சைக்கோ கொலைகாரன்!

சேலத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர் என்ற  சைக்கோ ஜெயசங்கர். லாரி டிரைவரான இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம்,  இந்தி, மராத்தி ஆகிய 5 மொழிகள் தெரியும். தனியாக இருக்கும் பெண்களை  பலாத்காரம் செய்து கொலை செய்யும் இவரை 2009ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த  பலாத்கார கொலை வழக்கு தொடர்பாக முதலில் சேலம் போலீசார்  கைது செய்து  சிறையில் அடைத்தனர்.  2011ம் ஆண்டு அங்கிருந்து தப்பியோடிய  அவர், கர்நாடக மாநிலத்தில்  கைவரிசை காட்டினார்.

கர்நாடக மாநிலத்தில் 19 பலாத்காரம், கொலை வழக்குகள் இவர் மீது போலீஸ் நிலையங்களில் பதிவானது. இதில் சித்ரதுர்காவில் நடந்த  பலாத்காரம், கொலை வழக்கில் கர்நாடக நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை  வழங்கியது. இதையடுத்து போலீசார் அவரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  அடைத்தனர். அங்கு இருந்து 2013ம்  ஆண்டு செப்.1ம் தேதி 30 அடி உயர சுவரை ஏறி குதித்து தப்பியோடினார்.  தனிப்படை அமைத்த போலீசார் 3 நாட்கள் கழித்து கூடலுகேட் அருகே அவரை கைது  செய்தனர். 

இதையடுத்து, போலீசார் அவரை பிரத்யேக அறையில் அடைத்து  கண்காணித்து வந்தனர். பிற கைதிகளுடன் நெருங்கி பேசுவதற்கான வாய்ப்பு  ஜெயசங்கருக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது  அறையில் இருந்த அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. 

இதையடுத்து  ஜெயசங்கரின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  நேற்று காலை சம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.  அதில் அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து  கொண்டிருப்பது உறுதியானது. 

click me!