இதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க...! காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய மனித உரிமை ஆணையம் 

 
Published : Mar 08, 2018, 06:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
இதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க...! காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய மனித உரிமை ஆணையம் 

சுருக்கம்

human rights commission notice to police department

காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்டு கர்ப்பிணி பெண் மரணமடைந்த விவகாரம் குறித்து 8 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உஷா, 3 மாத கர்ப்பிணியான மனைவியுடன், திருச்சியில் நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்றார்.

அப்போது, திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை மறித்த்துள்ளனர். வ்கனம் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றதை அடுத்து, இரு சக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று எட்டி உதைத்திருக்கிறார்.

இதில் நிலை தடுமாறிய உஷா மற்றும் அவரது கணவர் ராஜா இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் காமராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறை ரீதியாக அவர் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

இந்நிலையில், காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்டு கர்ப்பிணி பெண் மரணமடைந்த விவகாரம் குறித்து 8 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 


 

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..