+2 தேர்வு முடிவுகள்... மே12ஆம் தேதி காலை 10 மணியளவில் வெளியாகிறது... மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்பு...

First Published May 9, 2017, 3:06 PM IST
Highlights
hsc results on may 12th


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் இம்மாதம் 12 தேதி காலை 10:00 மணியளவில் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,737 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,98,763 மாணாக்கர் தேர்வெழுதவிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் மாணவியர் 4,80,837 பேர் ஆவர். மாணவர்கள் 4,17,994 பேர் மற்றும் ஒரு திருநங்கை ஆவார். இவர்களைத்தவிர, சிறைக்கைதிகள் 98 பேரும் தேர்வு எழுதினார். 

பள்ளி மாணவர்களைத் தவிர 34,868 தனித்தேர்வர்களும் ப்ளஸ் டூ தேர்வை எழுதவுள்ளனர். தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 5,69,304 ஆகும். புதுச்சேரியில் 143 பள்ளிகளிலிருந்து 33 தேர்வு மையங்களில் 15,660 மாணாக்கர் தேர்வில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் பணி இன்று முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மே 12-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் கீழ்கண்ட இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.

www.tnresults.in
www.tnresults.nic.in
www.tnresults.gov.in

click me!