
மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அங்கு பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. வயல்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.