தென் மாவட்டங்களில் இரவுக்குள் கொட்டித் தீர்க்கப்போகுது மழை !! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்…

By Selvanayagam PFirst Published Oct 6, 2018, 12:10 AM IST
Highlights

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 3  மணி நேரத்துக்கு இடி,மின்னலுடன்  கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


 

தமிழகத்தில் நாளை   அதாவது 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மிக பலத்த மழை பெய்யும்  என்றும் ஒரே நாளில் 24 சென்ட்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. 

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அன்று இரவுக்குள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!