
சென்னை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கிண்டி, உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் நகரில் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதேபோல் திருவண்ணாமலை, ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. ஆதனூர், மெய்யூர், மொபப்பந்தாங்கல், ஒண்டிகுடிசை உள்ளிட்ட பகுதிகளிலம் மழை பெய்து வருகிறது.