அப்பா நல்லாயிருக்காரு...சிக்கிரமாக வந்துடுவாரு; கனிமொழி தகவல்!

 
Published : Jul 28, 2018, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
அப்பா நல்லாயிருக்காரு...சிக்கிரமாக வந்துடுவாரு; கனிமொழி தகவல்!

சுருக்கம்

He is better His blood pressure has stabilised DMK leader Kanimozhi on DMK President M Karunanidhi health condition

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து கனிமொழி எம்.பி. பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கனிமொழி தகவல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்றிரவு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு ரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து திமுக எம்.பி.யும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி இன்று மீண்டும் காவிரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக கூறினார். கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏறபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தியை அறிந்த திமுக தொண்டர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

கோவை விமான நிலையத்தில் பரபரப்பு.! சுத்துப்போட்ட சுங்கத்துறை அதிகாரிகள்.! நடந்தது என்ன?
ஜன.20ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை.. சபாநாயகர் அறிவிப்பு