அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

Published : Dec 17, 2022, 12:39 PM IST
அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

சுருக்கம்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அரையாண்டு தேர்வுக்கான விடுமுறையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது.  

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் வருகின்ற 23ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கான விடுமுறையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி அரையாண்டு தேர்வுகள் 23ம் தேதி நிறைவு பெறும் நிலையில், அடுத்த தினமே அதாவது 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு தேர்வுக்கான விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!