‘குடிகாரி’ என திட்டிய முன்னாள் காதலன்... தற்போதய காதலை வைத்து தீர்த்துக் கட்ட பலே போட்ட இளம் பெண்! சென்னையில் பயங்கரம்...

 
Published : Mar 05, 2018, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
‘குடிகாரி’ என திட்டிய முன்னாள் காதலன்... தற்போதய காதலை வைத்து தீர்த்துக் கட்ட பலே போட்ட இளம் பெண்! சென்னையில் பயங்கரம்...

சுருக்கம்

girl friend trying to kill her ex lover

பொதுமக்கள் முன்னிலையில் தன்னை குடிகாரி... குடிகாரி என கலாய்த்த, முன்னாள் காதலனை, இளம்பெண் தனது தற்போதைய காதலனுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பம்மல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பம்மல் பூங்கா தெருவில் வசித்து வருபவர் கோபி. தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே தெருவில் வசித்து வரும் கீர்த்திகா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே இருவருக்கும் சில மனசங்கடத்தல் பிரிந்த இவர்கள், கோபிக்கு தெரியாமல் கீர்த்திகா அனகாபுத்தூரை சேர்ந்த  சரத்குமார் என்ற வாலிபரையும் காதலித்து வந்ததாகவும், மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்ட கோபி, கீர்த்திகாவை விட்டு விலகிச் சென்றுள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பம்மல் பகுதியில் உள்ள பஜார் வீதிக்கு வந்த கீர்த்திகாவை பார்த்த கோபி, தனது நண்பர்களுடன் சேர்ந்து, குடிகாரி குடிகாரி என கிண்டல் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கீர்த்திகா, கோபியை சரமாரியாக அசிங்க அசிங்கமாக திட்டியிருக்கிறார். இதனால் கோபமான முன்னாள் காதலன்  கோபி கீர்த்திகாவை கீழே தள்ளிவிட்டு, அவரது முகத்தில் அடித்துள்ளார். ஆவேசத்துடன் அங்கிருந்து சென்ற கீர்த்திகா, பஜாரில் நடந்ததை தனது தற்போதைய காதலனிடம் கூறி அழுதுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தற்போதைய காதலன் சரத்குமார் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கோபி வீட்டுக்கு சென்றார். 

அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிக் கொல்ல முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட கோபி, அங்கிருந்து வீட்டினுள் ஓடினார்.

அப்போது, பையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து கோபி மீது சரத்குமார் வீசினார். அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு கோபி மீது விழாமல், வீட்டின் தரையில் விழுந்து வெடித்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், சரத்குமார் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பித்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் வழக்கு பதிந்து சரத்குமார், அவரது கூட்டாளிகள் மற்றும் கீர்த்திகாவை தேடி வருகின்றனர். தப்பியோடிய சரத்குமார் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி  உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் பம்மல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலியை பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்