
சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த சிறுமி ஹாசினியை அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பொறியாளர் தஷ்வந்த், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சம்பவம் தமிழகத்தையே நடுநடுங்க வைத்தது.
இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், தஷ்வந்தை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், அவரது தாயை கடந்த டிசம்பர் மாதம் கொலை செய்துவிட்டு தப்பினார். பின்னர் மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கடந்த 14ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்டன. இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்த தீர்ப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமைகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தீர்ப்பு இருக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.