
சென்னை தி.நகரில் மீண்டும் தீ விபத்து. சென்னை சில்க்ஸ் அருகே உள்ள பி.கே.ஆர். ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது அனைக்கப்பட்டது. திடீர் என தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த புதன்கிழமை அதிகாலை தீ விபத்தில் பலகோடி ரூபாய் பிருட்கள் சேதமானது. கட்டிடம் முழுவதுமாக இடிக்கும் பனி நடந்து வருகிறது.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களே ஆனா நிலையில் தி சென்னை சிக்லஸ் அருகில் உள்ள பி.கே.ஆர். ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அருகில் இருந்தவர்கள் பதறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை உடனடியாக அணைக்கப்பட்டது.
ஹோட்டல் திறக்கப்படாத நிலையில் சமையலரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.