
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முடங்கியது. பேச்சுவார்த்தை எடுபடாததால் 125 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டத்தால் அதில் 125 பேரை காவலாளார்கள் கைது செய்தனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிக்கொண்டே விவசாயிகள் கைதாகினர். அவர்களை அருகிலிருந்த திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
பின்னர், அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகார்கள், போராட்டம் நடத்திய விவசாயிகள் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். இதனையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.