விவசாயிகள் மரணம்... அமைச்சர்கள் கொச்சையாக பேசவில்லையாம் - அமைச்சர் துரைக்கண்ணு புதுக்கதை

Asianet News Tamil  
Published : Jan 07, 2017, 05:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
விவசாயிகள் மரணம்... அமைச்சர்கள் கொச்சையாக பேசவில்லையாம் -  அமைச்சர் துரைக்கண்ணு புதுக்கதை

சுருக்கம்

விவசாயிகள் மரணம் குறித்து அமைச்சர்கள் சம்பத் , வெல்லமண்டி நடராஜன் கொடுத்த பேட்டி தமிழகம்ம் முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்திவரு நிலையில் அப்படி எந்த அமைச்சரும் பேட்டி கொடுக்கவில்லை என்று அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அமைச்சர் எம்சி சம்பத் கடலூரில் நேற்று ஆய்வு செய்தபோது அவரிடம் செய்தியாளர்கள் கடலூரில் விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளார்களே என்று கேட்டனர். அப்படியெல்லாம் ஒன்றுமில்லைங்க விவசாயிகள் மரணத்துக்கு இதெல்லாம் காரணமில்லைங்க .
உடல் உபாதை , வயோதிகம் , நோய் பாதிப்பினால் இயற்கையாக இறந்திருக்கிறார்கள் , இது எதிர்கட்சிகள் சதி என்று கூறினார்.
வறட்சியால் யாரும் உயிரிழக்கவில்லை எதிர்கட்சிகள் சதிதான் என்கிறீர்களா என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்டவுடன் ஆமாம் அது இயற்கையான உடல் உபாதைகளால் நடந்த உயிரிழப்புகள் தான் இது எதிர்கட்சிகள் சதி என்று அழுத்தமாக தெரிவித்தார்.
இதே கருத்தை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜனும் தனது ஆய்வு பயணத்தின் போது தெரிவித்தார்.  100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்கள் வாடுவதை பார்த்து மனம் வெதும்பி உயிர் விட்டதையும், தற்கொலை செய்து கொண்டதையும் பார்த்து நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது.
எதிர்கட்சி  தலைவர்கள் ஒட்டுமொத்தமாக உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் அமைச்சர்களின் பேச்சு பெரும் எதிர்ப்பை கிளப்பியது.
அமைச்சர்களை நீக்கவேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் அமைச்சர்கள் இருவரும் அப்படி பேசவே இல்லை என வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.
அமைச்சர்களின் பேட்டை வலைதளங்கள்லில் , தொலைக்காட்சிகளில் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் சூழ்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சு புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
சென்னையில் இனி தண்ணீர் பிரச்சனையில்லை.. குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் 'மெகா' திட்டம்! சூப்பர்!