
நாமக்கல்
ஓய்வூதியர்கள் இறக்கும்பட்சத்தில் குடும்ப நல நிதியாக ரூ.1 இலட்சம் தர வேண்டும் என்று ஓய்வுபெற்ற அலுவலர் சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், மறவாபாளையத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க 26-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பரமத்திவேலூர் வட்டார ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் தலைவர் முத்துரங்கன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காளியண்ணன் வரவேற்றுப் பேசினார்.
இதில், செயலாளர் பட்டாபிராமன் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் அர்த்தனாரி வரவு, செலவு அறிக்கையை வாசித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ரங்கராஜ் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று பேசினார்.
இக் கூட்டத்தில், "மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
7-வது ஊதியக்குழு முரண்பாட்டை களைய வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் இறக்கும்பட்சத்தில் குடும்ப நல நிதியாக ரூ. 50 ஆயிரம் என்பதை மாற்றி ரூ. 1 இலட்சமாக வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கருப்பன், துணைத் தலைவர் தியாகராஜன், ஆலோசகர் பொன்னுசாமி, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இணைச் செயலாளர் ராஜன் நன்றித் தெரிவித்தார்.