ஓய்வூதியர்கள் வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்..
இராமநாதபுரம்
ஓய்வூதியர்கள் வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்..
undefined
அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் நேற்று இராமநாதபுரத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கக் கட்டிடத்தில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமைத் தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கதிரேசன், முகமது சீது, கருப்பையா, முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், "இராமநாதபுரம் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை சாலைகளின் இருபக்கமும் உள்ள மணலை நீக்கிவிட்டு தார்ச் சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன்மூலம் பொதுமக்களை விபத்துகளில் இருந்து காப்பாற்றலாம்;
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும்;
மருத்துவப்படியை ரூ.1000-மாக உயர்த்தி வழங்க வேண்டும்;
காப்பீட்டு பங்குத் தொகை ரூ.350-லிருந்து ரூ.150-ஆக குறைக்க வேண்டும்;
ஓய்வூதியர்கள் வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்ட முன்னாள் இணைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், மின்வாரிய தொழிற்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் குருவேல், போக்குவரத்து மண்டலச் செயலாளர் பௌல்ராஜ், மாநிலத் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.
கூட்டத்தின் இறுதியில் மாவட்ட இணைச் செயலாளர் மகேந்திரநாத் நன்றித் தெரிவித்தார்.