ரயில் மாேதி உயிாிழந்த யானை..!!!

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 03:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
ரயில் மாேதி உயிாிழந்த யானை..!!!

சுருக்கம்

கோவை மதுக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைக் கூட்டத்தின் மீது, ரயில் மோதியதில், ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

 

வாளையார் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானைகள், வட்டக்காடு என்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது பாலக்காட்டில் இருந்து, கோவை நோக்கி வந்துகொண்டிருந்த ரயில், யானைகள் மீது மோதியது.

 

இதில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, அதே இடத்தில் உயிரிழந்தது. தகவல் அறிந்த கேரள வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த யானையின் உடல், உடற்கூறு ஆய்வுக்குப்பிறகு அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

 

வாளையார்- மதுக்கரை பகுதிகளில் 5 மாதங்களில், 4 யானைகள் ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த பகுதியில் மட்டும் சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று, ரயில்வே நிர்வாகத்தை வனத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

PREV
click me!

Recommended Stories

ரவுடி பொன்னை பாலுக்கு ஜாமீன்.. காலில் விழுந்து கதறல்.. நடந்தது என்ன? ரிவென்ஞ் எடுக்க காத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்பு
கருத்துக்கணிப்பு சதவீதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என வையாபுரி பேச்சு