தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது.. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி !

Published : May 10, 2022, 03:30 PM ISTUpdated : May 10, 2022, 03:32 PM IST
தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது.. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி !

சுருக்கம்

சமீப நாட்களாக தமிழகத்தில் தலைதூக்கியுள்ள மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக கோடைகாலத்தில் ஏற்படுவதுதான் என்று அரசு தரப்பில் சொன்னாலும், பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கும், மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இன்று தமிழக சட்டசபையில் எம்எல்ஏ மணிக்கண்ணன் கேள்விக்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 17 நாட்களும், மே மாதத்தில் 6 நாட்களும் உச்சபட்ச மின் தேவை 16,000 மெகாவாட்டாக உயர்ந்த போதிலும் தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 

மே 1-8 வரை 5,94,000 யூனிட் மின்சாரம், ரூ.12 என்ற அளவில் எக்ஸ்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து மின் தேவை சரிசெய்யப்பட்டது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு, தடையில்லா சான்று வழங்கப்பட்டால் தான், மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் மின் இணைப்பு இல்லாத வீடுகள் பற்றிய விவரங்களைத் தந்தால், வருவாய்த்துறையுடன் பேசி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! மூடப்படும் மதுக்கடைகள்.. அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல் !

இதையும் படிங்க : MK Stalin : முதலில் லண்டன், அடுத்து அமெரிக்கா பயணம்.. மோடிக்கே டஃப் கொடுக்கும் ஸ்டாலின்.! புது ஸ்கெட்ச்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!