தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆவணம் பறிக்கப்படும்…

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 08:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆவணம் பறிக்கப்படும்…

சுருக்கம்

கரூர்,

சாலை பாதுகாப்பு விழாவில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் ஆவணம் பறிக்கப்படும் என்று கூறி தலைக்கவசத்தின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழா நடைப்பெற்றது. கரூர் மாவட்டத்திலும் இவ்விழா நடைப்பெற்றது. இதற்கு காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமை வகித்தும், புகைப்பட கண்காட்சியை திறந்தும் வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

இதில் தலைக்கவசம் அணிதல், வேகக் கட்டுப்பாடு போன்றவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தனர். மேலும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் ஆவணங்கள் பறிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த விழாவில், கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோ, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல், கரூர் நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா, தனிப்பிரிவு ஆய்வாளர் அருள்மொழி அரசு, போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சிவராமஜெயம், கோபிநாத், துணை முதன்மை போக்கு வரத்து காப்பாளர் தீபம் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

 

PREV
click me!

Recommended Stories

விசில் கோலமிட சொன்ன தளபதி.! செய்வோம் என முழக்கமிட்ட சிங்கப்பெண்கள்.!
Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!