
பெரம்பலூர்
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் கேட்டு கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை விதவிதமான போராட்டங்களை நடத்த மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். என்னென்ன போராட்டம் என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க...
வருகிற 5-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் போராட்டம் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
20-ஆம் தேதி தர்ணா போராட்டம், 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம், 27-ஆம் தேதி பிரசவம், உள்நோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சைகள் தவிர வேறு பணிகளில் ஈடுபடாமல் வேலை நிறுத்தம், செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம், செப்டம்பர் 21-ஆஅம் தேதி எந்த வித சிகிச்சைப் பணிகளிலும் ஈடுபடாமல் முழு வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.