தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக திமுக எம்.பி. இல்லாத மக்களவை தொகுதி எது தெரியுமா?

By Manikanda Prabu  |  First Published Mar 14, 2024, 3:03 PM IST

தமிழ்நாட்டின் ஒரு மக்களவை தொகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக திமுகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. அந்த தொகுதி எது தெரியுமா


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்த முறை திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவும் என தெரிகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் ஒரு மக்களவை தொகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக திமுகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை என்ற தகவலை வாசகர்களுக்கு சுட்டிக்காட்டவே இந்த பதிவு. ஆம், சிவகங்கை மக்களவை தொகுதியில் கடந்த 47 ஆண்டுகளாக திமுகவுக்கு ஒரு எம்.பி. கூட கிடையாது. இந்த தொகுதியை திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே பெரும்பாலும் கொடுத்து விடும். சில சமயங்களில் நேரடியாக திமுகவே போட்டியிட்டுள்ளது. ஆனால், அந்த தேர்தல்களில் அக்கட்சி தோல்வியடைந்ததுதான் வரலாறு.

Tap to resize

Latest Videos

சிவகங்கை மக்களவை தொகுதியில் திருமயம், ஆலங்குடி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சிவகங்கை மக்களவை தொகுதியில் கடந்த 1967 முதல் 1977 வரை நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களில் திமுகவின் தா.கிருட்டிணன் வெற்றி பெற்றுள்ளார்.

அதன்பிறகு, இன்று வரை அந்த தொகுதியில் ஒரு திமுக எம்.பி. கூட கிடைக்கப்பெறவில்லை. 1977, 2014 ஆகிய இரண்டு தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இடையே, 1996, 1998 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், அந்த கட்சி சார்பாக காங்கிரஸில் இருந்து அக்கட்சிக்கு சென்ற ப.சிதம்பரமே வெற்றி பெற்றார். சிவகங்கை தொகுதியில் அதிக முறை எம்.பி.யாக வெற்றி பெற்றவர் ப.சிதம்பரம். இவர், 1984, 1989, 1991, 1996, 1998, 2004, 2009 ஆகிய தேர்தல்களில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரது மகன் ப.சிதம்பரம் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது எம்..பி.யாக உள்ளார். இடையில், 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதர்சன் நாச்சியப்பன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலங்கள் எவை? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

கடந்த 2014, 1991, 1989, 1984 ஆகிய மக்களவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டுள்ளது. ஆனால், அந்த தேர்தல்களில் திமுக தோல்வியடைந்து விட்டது. அதேசமயம், எதிர்வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியை திமுக குறி வைத்துள்ளது.

சிவகங்கை தொகுதி திமுக கூட்டணியில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்படும். அது, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் தொகுதியாகும். கடந்த முறை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருக்கிறார். இந்த முறையும் அவர் சிவகங்கை தொகுதிக்கு காய் நகர்த்தி வருகிறார்.

ஆனால், கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு தரக் கூடாது என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த முறை அந்த தொகுதியை கேட்டு பெற வேண்டும் திமுகவினரும் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!