லீவு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆப்பு... கல்வித்துறை அதிரடி!

By vinoth kumarFirst Published Dec 21, 2018, 10:36 AM IST
Highlights

முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அரசு அலுவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் முன் அனுமதியின்றியும் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் லீவ் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மரணமடையும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் தெரிவித்துள்ளது. இதனால் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

click me!