நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கட்டம் கட்டும் திமுக..? ஸ்டாலினுக்காக களம் இறங்கும் இந்தியா கூட்டணி

Published : Dec 09, 2025, 06:54 AM IST
Justice Swaminathan

சுருக்கம்

திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சியை இந்தியா கூட்டணியோடு இணைந்து திமுக தீவிரப்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோவில் அதிகாரிகளுக்கு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிக்கு எதிராக பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை எதிர்க்கட்சி எம்பிகள் கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நீதிபதிக்கு எதிரான பதவி நீக்கம் தீர்மானத்தை மக்களவை அல்லது மாநிலங்களவைத் தலைவரிடம் இன்று அளிக்க எதிர்க்கட்சி எம்பிகள் திட்டமிட்டுள்ளனர். அரசமைப்பு விதிகளின் படி ஒரு நீதிபதியை பதவி நீக்க விதி எண் 124(4) வழிவகை செய்கிறது. இதற்கு மக்களவையில் குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

உறுப்பினர்களின் ஆதரவு பெறப்பட்ட பின்னர் தீர்மானம் ஏற்றுக்்கொள்ளப்பட்டு விசாரணைக்கு அளிக்கப்படும். அதனை மூவர் குழு விசாரித்து அறிக்கை அளித்தவுடன் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கப்படும். அதன் முடிவில் வாக்கெடுப்ப நடத்தப்படும். வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்கும் பட்சத்தில் நீதிபதியை பதவி நீக்க குடியரசு தலைவர் உத்ததரவிடுவார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!