முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழா: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நெகிழ்ச்சி !

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழா: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நெகிழ்ச்சி !

Published : Nov 16, 2026, 09:03 PM IST

சென்னையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழாவில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது கே.என். நேருவின் பண்புகளையும், கட்சிப் பற்றையும் வெகுவாகப் பாராட்டிய துரைமுருகன், நேருவின் இல்லத்தில் நடைபெறும் எந்தவொரு திருமணமும் கழகத்தின் சிறு மாநாடு போலவே கோலாகலமாக அமையும் என்றார். இந்தியாவின் 56 சமஸ்தானங்களை ஒன்றிணைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேலைப் போலவே கே.என். நேரு மன உறுதி கொண்டவர் என்றும், அவரது தந்தை அவசரப்பட்டு நேரு எனப் பெயரிட்டுவிட்டார்; இன்று இருந்திருந்தால் 'வல்லபாய் படேல்' என்றுதான் பெயரிட்டிருப்பார் என்றும் துரைமுருகன் புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர், எங்களிடம் இல்லாத ஒரு தனிச்சிறப்பு நேருவிடம் உள்ளது; எப்பேர்ப்பட்ட எதிர்ப்பு வந்தாலும், சொல்லொண்ணாத் துயரங்கள் வந்தாலும் அதைப்பற்றி அவர் துளியும் கவலைப்பட மாட்டார் என்றார். "ராமஜெயத்தின் மறைவுக்குப் பிறகு எனக்கு எந்தத் துன்பமும் சர்வ சாதாரணமாகத் தெரிகிறது" என்று நேரு கூறுவார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட துரைமுருகன், தலைவர் கலைஞர் மற்றும் தளபதி மு.க. ஸ்டாலின் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் அதை வேதமாகக் கருதிச் செயல்படுத்தும் உரத்த பக்தர் கே.என். நேரு என்றும், அவரது சகோதரர்களே அவருக்குப் பெரும் பலம் என்றும் பாராட்டி மணமக்களை வாழ்த்தினார்.

04:55முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழா: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நெகிழ்ச்சி !
04:44எந்த மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் கே.என். நேரு இல்லை - திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
08:19மேகதாது விவகாரத்தில் தமிழக உரிமையை முதல்வர் மீட்டு வர வேண்டும் ! - அண்ணாமலை வலியுறுத்தல்!
03:20திருச்செந்தூர் முருகன் கோவிலில் களைகட்டிய சூரசம்ஹார பெருவிழா: கடல் அலையெனத் திரண்ட பக்தர்கள் !
06:38திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார விழா !
05:12திருச்சியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் தொடக்கம்: 150 கிலோ பிளம் கேக் தயாரிப்புப் பணிகள் !
06:17அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ! செல்லூர் ராஜு பேட்டி
02:13குரூஸ் பெர்னாண்டஸின் 157-வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஸ்ரீநாத்!
02:38காவிரி துலா உற்சவப் பெருவிழா: மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கோவில் தேரோட்டம்!