ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன். இவர் காரைக்காலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு இன்னோவா கிரிஸ்டா காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
மயிலாடுதுறை அருகே ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் பயணித்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன். இவர் காரைக்காலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு இன்னோவா கிரிஸ்டா காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மயிலாடுதுறை அடுத்துள்ள காளியப்பநல்லூர் அருகே வந்து கொண்டிருந்த போது சர்வீஸ் சாலையில் இருந்து திடீரென தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் திரும்பியதாக கூறப்படுகிறது.
அப்போது அதிவேகமாக வந்த ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ-வின் கார் ஓட்டுநர் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக சாலை ஓரம் காரை திருப்பி உள்ளார். அப்படி இருந்த போதிலும் இருசக்கர வாகனம் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம், கார் ஆகியவை மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணிகண்டன் மற்றும் செல்வகுமாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தான் வந்த அரசு வாகனத்தில், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி வந்து மணிகண்டன் (18), 12ம் வகுப்பு மாணவர் செல்வகுமார் (16) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.