தூய்மைப் பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்: திருப்பத்தூர் எம்.எல்.ஏ. திருப்பதிக்கு குவியும் பாராட்டுகள்!

Published : Nov 10, 2026, 01:30 PM IST
Diwali With Real Heroes Tirupattur MLA Dr Thirupathi Gifts Sarees Sweets To Sanitation Workers

சுருக்கம்

பண்டிகை நாளில் சொந்த வீட்டில் கொண்டாடாமல் தூய்மைப் பணியாளர்களுக்குப் புடவைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய திருப்பத்தூர் எம்.எல்.ஏ டாக்டர் திருப்பதியின் மனிதநேயச் செயல் தொகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரில் குடிநீர்ப் பிரச்னை தொடர்பாகப் புகாரளிக்க சென்ற இளைஞரைத் துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக எழுந்த புகார் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அரசு இது தொடர்பாக விசாரணைக் குழு அமைத்துள்ளது. அதேசமயம், தூய்மைப் பணியாளர்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி மக்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த கார்த்திக் என்பவர், தங்கள் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை எனப் புகார் தெரிவிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அத்தொகுதி எம்.எல்.ஏ-வும், சட்டமன்றத் துணை சபாநாயகருமான ரவிசங்கர் அவரைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறி ஒரு வீடியோ வெளியாகிச் சமூக வலைதளங்களில் வைரலானது. இது பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் சர்ச்சையான சில மணி நேரங்களிலேயே கார்த்திக்கின் புதிய வீடியோ ஒன்று வெளியானது. அதில், "என்னை யாரும் தாக்கவில்லை; கூட்டத்தில் ஒரு சிறிய தள்ளுமுள்ளு மட்டுமே ஏற்பட்டது. இந்த விவகாரத்தை தேவையில்லாமல் சிலர் பெரிதாக்குகிறார்கள்" என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், அந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே கார்த்திக் மீண்டும் புதிய தகவலைக் கூறினார். அதில், "துணை சபாநாயகர் ரவிசங்கர் என்னை தாக்கியது உண்மைதான்" என்று உறுதிபடத் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த தன்னைத் துணை சபாநாயகர் தரப்பினர் நேரில் வந்து மிரட்டியதாகவும், அவர்களின் மிரட்டலுக்குப் பயந்தே "யாரும் தாக்கவில்லை" என முந்தைய வீடியோவில் பேசியதாகவும் கூறி அவர் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினர் மூலம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை அறியவும், முழுமையாக விசாரணை நடத்தவும் தமிழக அரசு சார்பில் ஒரு தனி விசாரணைக் குழு அமைத்து அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருபுறம் இத்தகைய சர்ச்சைகள் வெடித்துக்கொண்டிருக்கும் வேளையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான டாக்டர் திருப்பதி செய்த செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் எம்.எல்.ஏ டாக்டர் திருப்பதி கலந்துகொண்டார். அலுவலகத்தில் சிறப்புப் பூஜைகள் செய்து, தூய்மைப் பணியாளர்களை நேரில் வரவழைத்துக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்குப் புடவைகளையும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.

பண்டிகை நாளில் தனது வீட்டில் கூடக் கொண்டாட்டங்களில் ஈடுபடாமல், பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடிய எம்.எல்.ஏ டாக்டர் திருப்பதிக்கு தொகுதி மக்களிடமிருந்தும் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், மக்களுடன் எளிமையாகப் பழகும் மருத்துவர் திருப்பதி போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்சியில் இன்னும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் திருப்பத்தூர் மக்கள் முன்வைத்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kanda Sashti 2026 Day 2: கந்த சஷ்டி 2ஆம் நாள் விரதம்.! முருகப்பெருமானை வழிபட வேண்டிய முறைகள், விரதத்தின் சிறப்புகள், கிடைக்கும் பலன்கள்.!
கல்வித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அமைச்சர் திரு. ராஜ்மோகன் பேட்டி !