
பிரபல திரைப்பட இயக்குநர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மணிரத்னம் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மணிரத்னம் வழக்கம்போல் அவரது அலுவலகத்திற்கு வந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது உதவி இயக்குநர் மற்றும் நண்பர்கள் சரியாக 3 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு 2-வது முறையாக அவருக்கு நெஞ்சுவலி வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவருக்கு மிகப்பெரிய பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இருந்தாலும் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்ட காரணத்தால் உடனடியாக அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்ததுமே தமிழ் திரையுலகினர் நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். தற்போது அவர் சிம்பு, விஜய்சேதுபதி, உள்ளிட்டோரை வைத்து செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கி வருகிறார்.