விஜயை மொத்தமா டேமேஜ் செய்ய திமுக இவ்ளோ கோடிகளை வாரி இறைந்ததா..? பெலிக்ஸ் ஜெரால்டு சொல்வது உண்மையா..?

Published : Oct 26, 2025, 09:26 AM IST
Tamilandu

சுருக்கம்

தவெக தலைவர் விஜய்யின் பெயரை கெடுக்க திமுக கோடி கோடியாக பணத்தை வாரி இறைத்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம். 

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு விஜய் தான் காரணம் என திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில், இது செந்தில் பாலாஜி மற்றும் திமுகவின் திட்டமிட்ட சதி என தவெகவினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யை வீழ்த்துவதற்காக திமுக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய்க்கு எதிராக திமுகவின் பிளான்

இது தொடர்பாக தனது 'ரெட் பிக்ஸ்' யூ டியூப் சேனலில் பேசிய பெலிக்ஸ், ''விஜய்யை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. விஜய்க்கு எதிராக ஒரு வலைப்பின்னலே செயல்படுகிறது. இதன் பின்னணியில் பென் நிறுவனம் உள்ளது. பென் நிறுவனம் 2024ம் ஆண்டில் இருந்து இதுவரையில் 17 கோடியே 84 லட்சம் ரூபாய் யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்கு செலவிட்டுள்ளது. இதில் கூகுளுக்கு மட்டுமே அதிகளவில் செலவு செய்துள்ளனர்.

3 மாதங்களில் 75 லட்சம் ரூபாய் செலவு

இதில் நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்பட்சமாக செலவு செய்துள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 38 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். நான் செல்வது ஆதராப்பூர்வமான டேட்டா. கூகுளின் விளம்பர பிரிவில் இருந்து வாங்கிய ஆதாரப்பூர்வமான டேட்டா இது. செப்டம்பர் மாதத்தில் 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். இந்த மாதத்தில் 14 லட்சம் என கடந்த 3 மாதங்களில் 75 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.

விஜய்க்கு எதிரான வீடியோக்கள் ப்ரோமேட்

இதில் விஜய்க்கு எதிரான கருத்துகளை பரப்பவே அதிக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது விஜய்க்கு எதிராக பேசிய ஒரு பாட்டியின் வீடியோவை வைரலாக்கவும், கரூர் சம்பவம் கட்டுப்பாடற்ற கூட்டம், இதுபோல் இனிமேல் நடைபெறக் கூடாது, இதெற்கெல்லாம் பதில் இருக்கா போன்ற செந்தில் பாலாஜி பேசிய வீடியோக்களை ப்ரோமேட் செய்யவும் பணத்தை செலவு செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் அதிக வீயூஸ் பெற்றுள்ளது.

கேரளாவிலும் விஜய்க்கு எதிரான வீடியோக்கள்

இதேபோல் முதல்வர் ஸ்டாலின் பேசிய 'வதந்தி பரப்பாதீர்கள்' போன்ற வீடியோக்களை ப்ரோமேட் செய்யவும் பணத்தை வாரி இறைத்துள்ளனர். விஜய்க்கு எதிரான வீடியோக்களை கரூர் பகுதிகளில் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் பரப்பி ப்ரோமேட் செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி விஜய்க்கு அதிக செல்வாக்கு உள்ள கேரளாவிலும் அந்த மாநிலம் முழுவதும் விஜய்க்கு எதிராக பேசப்படும் வீடியோக்களை பென் நிறுவனம் பரப்பியுள்ளது.

மெட்டாவிலும் பணத்தை வாரி இறைக்கின்றனர்

விஜய் பலம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவருக்கு எதிராக எதிர்மறை கருத்துகளை பரப்பியுள்ளனர். இதேபோல் திமுக அரசும் டிஜிட்டல் மீடியாவுக்கு 25 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த வேலையை திமுக அரசிடம் இருந்து பென் நிறுவனம் பெற்றுள்ளது. நான் மேலே சொன்ன ரூபாய் அனைத்தும் கூகுளுக்கு மட்டும் தான். அதாவது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளடக்கிய மெட்டாவில் தனியாக எல்லோரும் நம்முடன், ஸ்டாலின் குரல், நம்பர் 1 தமிழ்நாடு, சங்கி மங்கி சொங்கி ஆகிய பேஜ்களுக்காக ஒரு கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர்.

விஜய் மீதான வன்மம்

இதில் தவெகவினர் விஜய்க்கு எதிராக எழுதுவதை போலவே எழுதுகின்றனர். ஆனால் இது எல்லாம் தவெகவுக்கு சுத்தமாக தெரியாது. விஜய்யும் திரிஷாவும் தீபாவளி கொண்டாடுவது போல் போலியாக பரப்புகின்றனர். தவெகவினர் இதை நம்பக்கூடாது. உங்கள் தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொறுமை காக்க வேண்டும். அடுத்ததாக தவெகவினர் மாவட்ட செயலாளர்கள் மீது வதந்தி பரப்புவார்கள்.

தவெகவினர் ரியாக்ட் செய்ய கூடாது

விஜய் மீதும், தவெக மீதும் அதிக வன்மங்கள் பரப்பப்படுகின்றன. விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றே செயல்படுகின்றனர். தவெகவினர் தளரக் கூடாது. மக்கள் எல்லாவற்றுகும் பதில் கொடுப்பார்கள் என நினைத்து அமைதி காக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்