ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

First Published Dec 1, 2016, 11:48 AM IST
Highlights


நாமக்கல் மாவட்டத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் புதன்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் நாமக்கல் அண்ணாசிலை முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சின்னுசாமி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்பாட்டத்தில் வலுயுறுத்தப்பட்ட ஆறு அம்ச கோரிக்கைகள்:

  1. “எட்டாவது ஊதிய குழுவை அமைத்து, 1.1.2016 முதல் அமல்படுத்திட வேண்டும்”.
  2. “7 சதவீத அகவிலைப்படி உயர்வினை 1.7.2016 முதல் வழங்கிட வேண்டும்”.
  3. “பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை இரத்து செய்ய வேண்டும்”.
  4. “ஓய்வூதியர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும்”.
  5. “இராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு இரட்டை குடும்ப ஓய்வூதியத்தினை வழங்க வேண்டும்”.
  6. “புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பாடு மறுக்கப்படும் நிலையில், கட்டாய சந்தா தொகை பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்”

என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், மோகனூர், சேந்தமங்கலம், ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை வட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

click me!