
தனது அரசியல் பயணத்தினை உறுதியாக துவங்க முடிவு செய்துவிட்டார் தீபா. அத்தை ஜெயலலிதாவை போல் தீபாவும் தமிழகம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் கிளம்புகிறார். பிப்ரவரி முதல் வாரம் தொடங்கி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தன்னை யாராலும் தடுக்க முடியாது என்று பிரகடனப்படுத்திய தீபா , பேட்டி அளித்த அன்று மாணவர்கள் போராட்டத்தால் பிரபலமாகாமல் போனது.
இதையொட்டி தன்னுடைய அரசியல் பிரவேசத்தை பிரபலப்படுத்த தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். பிப்ரவரி முதல்வாரத்தில் மத்திய மண்டலத்தை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசனை நடத்துகிறாராம்.
தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை மொத்தமாக ஒவ்வொரு இடத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்த உள்ளார். 7 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்யும்போது அந்த மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக பிரத்யோக வாகனம் , பாதுகாவலர்கள் என ஒரு முழு செட்டப்புடன் செல்கிறார். தனது பயணத்தின் போது பொதுமக்களின் தொண்டர்களின் வரவேற்பு , எண்ணம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க உள்ளார்.
பின்னர் சுற்றுப்பயண விபரங்கள் , கட்சிக்காரர்கள் ஆலோசனை எல்லாம் முடிந்து தெளிவாக தனது அத்தை ஜெயலலிதாவின் பிறந்த நாளில் தனது அர்சியல் பிரவேசத்தை அறிவிக்கிறார் தீபாவுக்கு போகும் இடமெல்லாம் ஆதராவு பெருகி வருவதால் நிச்சயம் இந்த பயணம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.