கரையைக் கடந்த டிட்லி புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை!

Published : Oct 11, 2018, 04:22 PM IST
கரையைக் கடந்த டிட்லி புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை!

சுருக்கம்

டிட்லி புயல் கரையை கடந்துள்ளதால் புயலுக்கு வாய்ப்பில்லை என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்லி புயல் கரையை கடந்துள்ளதால் புயலுக்கு வாய்ப்பில்லை என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே கரையைக் கடந்த டிட்லி புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக மாறி, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளது. 

இந்த மாற்றத்தால், தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்றும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நாகர்கோவிலில், அரியலூர், தஞ்சை, திருவள்ளூர், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!