முதல்வர் எடப்பாடி கலந்து கொண்ட விழாவில் சலசலப்பு...

First Published Aug 17, 2017, 12:51 PM IST
Highlights
crisis in edappadi function


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி கிராம உதவியாளர்கள் குற்றம் சாட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை, கலைவாணர், அரங்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்குபவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் என்று கூறினார்.

தமிழகத்தில் தற்போது 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர் எனவும், அரசு அமைப்பில் எண்ணற்ற அதிகாரங்களைக் கொண்டவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் என்றும் பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசிக் கொண்டிருந்தபோதே, கிராம உதவியாளர்கள் திடீர் முழக்கத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை என வருவாய் கிராம உதவியாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

இதனால் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டார்.

click me!