நகராட்சி தலைவி மற்றும் உறுப்பினர்கள் நாளை போராட்டம் அறிவிப்பு…

First Published Nov 30, 2016, 10:59 AM IST
Highlights


நாகர்கோவில் மாவட்டத்தில், டெண்டர் விட்ட பணிகளுக்கு அனுமதி வழங்காததால் நகராட்சி தலைவி மற்றும் உறுப்பினர்கள் நாளை டிசம்பர் 1ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளனர்.

நாகர்கோவில் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் டெண்டர் விடப்பட்டது.

ஆனால் இதை மன்ற கூட்டத்தில் கொண்டு வந்து அனுமதி வழங்காமல் நகராட்சி ஆணையர் இழுத்தடித்து வருகிறார்.

இதனால் கோபமடைந்த நகராட்சி தலைவி மீனாதேவ் மற்றும் கவுன்சிலர்கள் கவுன்சில் கூட்ட அறைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் இல்லை.

செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. தலைவி மற்றும் உறுப்பினர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி அமர்ந்திருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு அதிமுக தவிர்த்த அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. டெண்டர் விடப்பட்ட பணிகளுக்கு அனுமதி வழங்காமல் இருப்பது சட்ட விரோம் என்று பல்வேறு கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரச்சனைக்கு தீர்வு காணாத பட்சத்தில் வரும் நாளை டிசம்பர் 1-ஆம் தேதி நகராட்சி முன்புறம் உள்ள பாலமோர் சாலையில் மறியல் போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

click me!