தூக்கிடபட்ட நிலையில் சடலம் மீட்பு; தற்கொலையா? கொலையா?

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 01:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
தூக்கிடபட்ட நிலையில் சடலம் மீட்பு; தற்கொலையா? கொலையா?

சுருக்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தைல மரத்தோப்புக்குள் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தவரின் சடலத்தை காவலாளர்கள் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜெயங்கொண்டம் கேவிஎம் நகர் பின்புறம் உள்ள தைலமரத் தோப்பில் ஒரு மரத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதை அவ்வழியாகச் சென்றவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் கண்டனர்.

இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் இனிகோதியன் உள்ளிட்ட காவலாளர்கள் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது.! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Tamil News Live today 30 December 2025: ரூ.1,950-க்கு விமான டிக்கெட்.. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சலுகை