டெங்குவை ஒழிக்க உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – திமுக எம்.எல்.ஏ காமெடி…

First Published Oct 23, 2017, 7:50 AM IST
Highlights
conduct local elections to eradicate dengue - DMK MLA


திண்டுக்கல்

டெங்குவை ஒழிக்க வேண்டுமானால் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று திமுகவின் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தெரிவித்தார். டெங்குவுக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எதாவது சம்மந்தம் இருக்குமோ?

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகர திமுக சார்பில் 15, 16-வது வார்டுகளுக்கு உட்பட்ட சத்தியாநகர் பகுதியில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் பலர் உயிரிழக்கின்றனர். இதனால் தமிழகத்தை டெங்கு பாதித்த மாநிலமாக அரசு அறிவிக்க வேண்டும்.

டெங்குவை ஒழிக்க வேண்டுமானால் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் முருகேசன், கிட்டான் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

click me!