
கோயம்புத்தூர்
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்படைய செய்த மத்திய அரசைக் கண்டித்து கோயம்புத்தூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், டாடாபாத்தில் மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 8–ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதனால், அதே நவம்பர் 8-ஐ கருப்பு தினமாக அனுசரித்தும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்படைய செய்த மத்திய அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) மாவட்டச் செயலாளர் தாமோதரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், ஆர்.கருமலையான், என்.அமிர்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்.ஏ.கோவிந்தராஜன், அஷ்ரப்அலி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை இட்டு தங்களது கண்டனத்தை பதிவிட்டனர்.