அதிர்ச்சி..! சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி.. இழுத்து மூடப்பட்ட புகாரி ஓட்டல்.. நடந்தது என்ன..?

Published : Apr 10, 2022, 09:37 AM IST
அதிர்ச்சி..! சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி.. இழுத்து மூடப்பட்ட புகாரி ஓட்டல்.. நடந்தது என்ன..?

சுருக்கம்

பிரபல புகாரி ஓட்டலில் சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததாக கொடுத்த புகாரில் ஓட்டலை 3 நாட்கள் இழுத்து மூட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.  

பிரபல புகாரி ஓட்டலில் சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததாக கொடுத்த புகாரில் ஓட்டலை 3 நாட்கள் இழுத்து மூட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.சென்னை ஒ.எம்.ஆர் சாலையில் ஓக்கியம் அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் புகாரி ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று கணவன் மனைவி இருவர் சாப்பிட சென்றுள்ளனர். சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். இந்நிலையில் பிரியாணியை சாப்பிட்டு இருக்கும் போது, அதில் கரப்பான்பூச்சி கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த, தம்பதியினர், ஓட்டல் நிர்வாகத்தினரிடம் முறையிட்டனர்.

 ஓட்டல் நிர்வாகத்தினர் அவர்களை பேசி சமாளிக்க முயன்றர். ஆனால் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததை குறித்து அந்த தம்பதியினர் உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் கொடுத்தனர். அங்கு விரைந்த வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுகுமார், காவல்துறை உதவியுடன் ஓட்டல் முழுவதும் அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.அப்பொழுது தான் மிக பிரபல ஓட்டலின் சமையலறை படு மோசமாக அழுகடைந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிகாரி அதிர்ச்சியடைந்தார். குறிப்பாக உணவுகள் சமைக்கும் அறை போதிய பராமரிப்பு இல்லாமல் கரப்பான்பூச்சி வாழும் இடமாக காட்சியளித்துள்ளது.

மேலும் சமையலறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே அழுங்கு படிந்து குப்பை குளமாக இருந்துள்ளது. உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளில் எதையும் பின்பற்றாமல் அசுத்தமான இடத்தில் உணவுகளை சமைத்துள்ளனர்.ஒரு கட்டத்தில் சமைக்கும் இடத்தில் சுற்றி திரியும் ஏராளமான கரப்பான பூச்சியை கண்டு , சோதனை செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஓட்டல் நிர்வாகத்தினரை சத்தம் போட்டுள்ளார்.

கரப்பான் பூச்சி பிரியாணி குறித்த புகாரின் அடிப்படையில் புகாரி ஓட்டலை மூன்று நாட்கள் மூட உத்தரவிட்டார். மேலும் ஓட்டலின் சமையலறையை சுத்தம் செய்யவும் எச்சரித்துள்ளார். இதனிடையே ஓட்டலில்  சமைத்து வைத்திருந்த பிரியாணியை மூட்டை மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று குப்பையில் போடப்பட்டது.இதோடு மட்டுமல்லாமல் 3 நாட்கள் கழித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வந்து உணவகத்தை சோதனையிட்ட பிறகு, ஓட்டலை திறக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். பராமரிப்பின்றி ஆபத்தான முறையில் உணவை சமைத்து, வாடிக்கையாளருக்கு கொடுத்த புகாரின் பேரின் ஒட்டலுக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!