வந்துட்டேன்னு சொல்லு நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... மீண்டும் கெத்தா ஊருக்குள் நுழைந்த சின்னத்தம்பி!

By vinoth kumar  |  First Published Jan 31, 2019, 10:28 AM IST

கோவையில் வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கோவையில் வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி யானை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தொடர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், மருத்துவக் குழுவுடன் இணைந்து சின்னதம்பி யானைக்கு மயக்கஊசி செலுத்தி கும்கி யானை உதவியுடன் பிடித்தனர். 

Tap to resize

Latest Videos

பின்னர் யானையை வாகனத்தில் ஏற்றும் முயற்சியின்போது, பின்னால் இருந்து கும்கி யானை தள்ளியதில் அதன் தந்தங்கள் குத்தி சின்னத்தம்பிக்கு பாயம் ஏற்பட்டது. மேலும் வாகனத்தில் மோதி அதன் 2 தந்தங்களும் உடைந்தன. இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு வரப்பட்டது. காயமடைந்த சின்னதம்பிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர்.

 

ஏற்கனவே சின்னதம்பியை தேடும் வகையில் பெண் யானையும், அதன் குட்டியும் சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அங்கலக்குறிச்சி ஊருக்குள் சின்னதம்பி யானை நுழைந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

click me!