பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்.! எப்போ வரை வாங்கலாம்.? என்னென்ன பொருட்கள் கிடைக்கும்.?

By Ajmal Khan  |  First Published Jan 9, 2025, 11:17 AM IST

தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது, தமிழகம் முழுவதும் உள்ள  2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 


பொங்கல் கொண்டாட்டம்

"பொங்கலோ பொங்கல்" என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. தமிழர் தம் ஊனோடு. உயிரோடு. உணர்வோடு கலந்த விழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஆயிரம் ரூபாய், பச்சரிசி, சக்கரை மற்றும் முழுக்கரும்பு வழங்கி வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பணம் வழங்கவில்லை. இதனையடுத்து முழு கரும்பு, பச்சரிசி மற்றும் சக்கரை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், 

பொங்கல் பரிசு- தொடங்கி வைத்த முதல்வர்

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும்" என்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (9.1.2025) சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

எத்தனை பேருக்கு பொங்கல் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் மூலம், 249.76 கோடி ரூபாய் செலவில் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். மேலும். பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ். 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும்.

பொங்கல் தொகுப்பு எப்போ வரை கிடைக்கும்.?

தமிழ்நாடு முழுவதும் உள்ள 37.224 நியாய விலைக்கடைகளில் இன்று (9.1.2025) முதல் 13.1.2025 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணிக்கு கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை. ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கைத்தறித்துறையைச் சேர்ந்த சுமார் 50,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

click me!