அரசின் ஆணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல், புதிய திட்டங்களை அரசுக்கு முன்மொழியுங்கள்- மு.க.ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Apr 27, 2023, 2:06 PM IST

 நம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வந்தால் இதையெல்லாம் கேட்பார் என்று நினைத்து செயல்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனை நான் குறையாகச் சொல்லவில்லை. துரிதமான நடவடிக்கையாகவே நான் பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

chief minister Stalin has urged the government officials to take steps to complete the government projects as soon as possible

 "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார் அப்போது, கோட்டையில் அமர்ந்து திட்டங்களைத் தீட்டினால் போதும், பணிகள் தானாக நடந்து விடும் என நினைக்காமல் மக்களுக்கு நெருக்கமாகச் சென்று, அரசால் வகுக்கப்பட்ட திட்டங்களின் செயலாக்கத்தை கள அளவில் கண்காணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கள ஆய்வில் முதலமைச்சர் என்ற இந்த திட்டம் துவக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அரசு திட்டங்களை செயலாக்குவதில் நீங்கள் சில சமயம் சந்திக்கக்கூடிய சிக்கல்கள் அல்லது தெரிவிக்க விரும்பும் ஆலோசனைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.! அமித்ஷாவை சந்தித்த பிறகு பல்டி அடித்த எடப்பாடி பழனிசாமி

Latest Videos

chief minister Stalin has urged the government officials to take steps to complete the government projects as soon as possible


முதன்முதலாக வேலூருக்குச் சென்ற போது நடத்திய ஆய்வுக்கும் அடுத்தடுத்த மாவட்டங்களில் நடத்துகிற ஆய்வுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். வேலூரில் நானோ, அமைச்சர்களோ, துறை செயலாளர்களோ என்ன மாதிரியான கேள்விகளை முன்வைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு மற்ற மாவட்டத்து அதிகாரிகள் அதனைத் தங்கள் மாவட்டத்தில் முடித்து வைத்திருக்கிறார்கள். நம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வந்தால் இதையெல்லாம் கேட்பார் என்று நினைத்து செயல்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனை நான் குறையாகச் சொல்லவில்லை. துரிதமான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். இத்திட்டத்தினால் நிகழும் நல்விளைவாகவே நான் இதைக்கருதுகிறேன்.

அடுத்து, நம் மாவட்டத்துக்கு முதலமைச்சர் எப்போது வருவாரோ என்ற எண்ணத்தோடு மாவட்டங்களில் பணிகள் எல்லாம் முடுக்கி விடப்படுவதாகவும் அறிகிறேன். எதுவாக இருந்தாலும் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறுகிறது, மக்கள் பயன்பெறுகிறார்கள் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பாரப்பது என்பது, அறிவிக்கப்பட்ட திட்டம் விரைந்து துவக்கப்பட்டு. குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்.எல்லாப்பணிகளும் தரமானதாக, முழுமையானதாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். அலுவலர்களிடமும் எதிர்பார்க்கின்றோம். அதற்குத் தேவை தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகும். கோட்டையில் எனது அறையில் டேஷ்போர்டு வைத்துள்ளேன். ஒவ்வொரு திட்டமும் எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை அதன் மூலமாக அவ்வப்போது அறிந்தும் வருகிறேன். 

அதேபோல் மாவட்ட அளவிலும் உங்களுக்கு அத்தகைய கண்காணிப்பு மிகமிக அவசியம். தொடர்ச்சியாக கண்காணித்தாலே எந்தத் திட்டமாக இருந்தாலும் அது சிறப்பாக நிறைவேறிவிடும். ஊரக வளர்ச்சித்துறை, கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதோடு அவர்களது வாழ்வாதாரத்திற்கும் பல்வேறு வழிகளில் உறுதுணையாக விளங்குகின்றது. என்னுடைய காலத்தில் இந்த மாவட்டத்தில் இந்த திட்டத்தை முடித்துக் காட்டினேன்- என்று உங்களுக்கு பெயர் வாங்கித்தரும் அளவுக்கு முடித்துக் காட்டுங்கள். இன்று ஆய்வு செய்யப்பட்ட மூன்று மாவட்டங்களும் விவசாயம் சார்ந்த மாவட்டங்கள் என்பதால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்குதல் ஆகியவற்றில் துறை செயலர், மாவட்ட ஆட்சியர்கள் என அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன். முக்கியமானதாகும். 

விவசாயிகள் வாழ்வு மேம்பட இவை மிகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொறுத்தவரைக்கும், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவது கண்காணிக்கப்பட வேண்டும். மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது ஒரு பக்கம் இருந்தால், இன்னொரு பக்கத்தில் பல்லாயிரம் கோடிகள் பணம் ஒவ்வொரு திட்டத்திற்கும் செலவு செய்யப்படுகிறது. எனவே, இரண்டு வகையிலும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் செயல்பட்டாக வேண்டும்.

இன்றைய ஆய்வுக் கூட்டத்தின் போது சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் காணப்பட்டது. நான் எந்தத் துறையையும் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. மாவட்ட ஆட்சியர்களும், துறைத் தலைவர்களும் அறிவீர்கள். அளிக்கப்பட்ட நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்காக, திட்டத்திற்காக செலவிடுவது தான் திறன்மிகு நிருவாகம் ஆகும். அதைத்தான் நான் உங்களிடம் எதிர்ப்பார்கிறேன். மாவட்ட நிருவாகம் என்பது மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள அமைப்பாகும். எல்லாத் திட்டங்களும் மாவட்ட அதிகாரிகளாகிய உங்கள் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை எந்தளவுக்கு விரைவாக சென்றடைகிறது என்பது உங்கள் திறமையை பொறுத்தது. நீங்கள் நல்ல திறமைமிக்க அலுவலர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். 

அதன்மூலம் மக்கள் நற்பயன் பெற வேண்டும். அதற்காகத் தான் அனைத்துமே. உங்களுக்கு மேலே உள்ள அதிகாரிக்கும், உங்களுக்கும் ஒருங்கிணைந்த செயல்பாடு இருப்பதைப் போல உங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அலுவலர்களோடு அதே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.மக்களோடு பழகி அவர்களின் தேவை அறிந்து செயலாற்றுங்கள். அவர்களின் பாராட்டினை பெறும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். அரசின் ஆணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல் நீங்கள் செயல்படுத்த விரும்பும் புதிய திட்டங்களை அரசிற்குச் சொல்லி முன்மொழிவுகள் அனுப்புங்கள். அரசு உங்கள் நல்ல பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

மோதலை தூண்டும் வகையில் பேச்சு.!நாம் தமிழர் மாநில நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கை கைது செய்ய போலீசார் தீவிரம்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image