பிளாஸ்டிக் பைக்கு நோ.. மஞ்சப்பைக்கு யெஸ்.. பொங்கல் திருநாளில் உறுதி எடுப்போம்..முதல்வர் அறிவுரை !!

By Raghupati RFirst Published Jan 14, 2022, 9:03 AM IST
Highlights

‘பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம், இனிமேல் மஞ்சப்பை பயன்படுத்துவோம்’  என உறுதிமொழி ஏற்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

எல்லாத்தொழிலுக்கும் மேலான தொழில் வேளாண்மைத்தொழில். இந்த தொழிலை செய்யும் விவசாயி தன் உழைப்பின் மூலம், தான் சிந்தும் வியர்வை மூலம், சேற்றில் கால் பதிப்பதன் மூலம் உலகுக்கே உணவளிக்கிறான். அவனுக்கு துணையாக நிற்பது சூரியனும், கால்நடைகளும் என்றால் மிகையாகாது.உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி பொங்கி வழியும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும். பொங்கல் பண்டிகையின் மற்றொரு சிறப்பு தித்திக்கும் கரும்பு. சர்க்கரை பொங்கல் இனிப்பு, கரும்பு இனிப்பு என்று அந்த ஆண்டு முழுவதும் இனிப்பாகவே கழியும் என்பதை கட்டியம் கூறும் நாள்தான் பொங்கல். இதன்படி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்!

கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன். pic.twitter.com/m02TEXBjUM

— M.K.Stalin (@mkstalin)

முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்!  கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன்.இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, #மீண்டும்மஞ்சப்பை பயன்படுத்துவோம்!’ என்று கூறியுள்ளார்.

click me!