
2015ம் ஆண்டில் பெய்ந்த மழை அளவை விட சென்னையில் இந்த ஆண்டு அதிக அளவில் மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை , திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் வலுவாக காற்றின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகல் முதல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சென்னையில் பனியும் வறண்ட வானிலையும் நிலவி வந்த நிலையில் இன்று திடீரென கனமழை பெய்துள்ளது. இதனிடையே கடந்த 7 மணி நேரத்திற்கு மேலாக விடாமல் பெய்து வரும் மழையினால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியுள்ளாகியுள்ளனர். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி , மயிலாப்பூர், ராயப்பேட்டை என பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பெய்த மழையில், எம்.ஆர்.சி நகரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 2 மணிநேரத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இங்கு குறைந்த நேரத்தில் அதிகப்படியான மழை பதிவாகியிருக்கிறது. மீனம்பாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் முக்கிய சாலைகள் தண்ணீர் தத்தளித்த வண்ணம் உள்ளன.
2015ம் ஆண்டில் பெய்ந்த மழை அளவை விட சென்னையில் இந்த ஆண்டு அதிக அளவில் மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை , திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 7 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்துவருவதால், இந்த அறிவிப்பு மக்களுக்கு கூடுதல் இன்னலை கொடுத்துள்ளது. மழைநீர் தேக்கம் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, போக்குவரத்து நெரிசல், மழைநீர் தேக்கம் போன்றவற்றால் பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்ட தகவலின்படி, “சென்னையில் 2015-ம் ஆண்டு சராசரியாக 209 செ.மீ மழை பதிவான நிலையில், இந்தாண்டு தற்போது வரை 217 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார். 1996, 2005ம் ஆண்டுகளுக்கு பிறகு அதிகபடியான மழை நாட்களைக்கொண்ட ஆண்டாக இந்தாண்டு இருந்ததாக பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.