பிரேக் பிடிக்காததால் சென்னை மாநகர பேருந்து விபத்து..!

 
Published : Jun 06, 2018, 08:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
பிரேக் பிடிக்காததால் சென்னை மாநகர பேருந்து விபத்து..!

சுருக்கம்

chennai bus accident

சென்னையில் பிரேக் பிடிக்காத மாநகரப் பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

47ஜி என்ற வில்லிவாக்கம்-பெசன்ட்நகர் வழித்தடப் பேருந்து, அண்ணா வளைவு மேம்பாலத்தில் ஏறி, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக இறங்கிக் கொண்டிருந்த போது பிரேக் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்ததால் வலது பக்கத்தின் பக்கவாட்டுத் தடுப்பில் இடித்து பின், இடது பக்க பக்கவாட்டுத் தடுப்பில் மோதியது. இருந்தாலும் பேருந்தை ஓட்டுநர் ரவி சாதுர்யமாக நிறுத்தினார்.

இந்த விபத்தில் இடுப்பு மற்றும் காலில் காயம் அடைந்ததால் பேருந்து ஓட்டுநர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

கீழடி, நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்