
பாலாற்றில் அடாவடி பண்ணும் ஆந்திர அரசு… தடுப்பணை உயரத்தை அதிகரித்து வருவதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி…
தமிழக-ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் சுவரை ஆந்திர அரசு 12 அடிக்கும் மேல் ஆந்திர அரசு உயர்த்திக் கட்டி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நதிநீர் பிரச்சனையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன.
காவேரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவும், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரளாவும், பாலாறு பிரச்சனையில் ஆந்திர அரசும் தமிழகத்தை ஏமாற்றி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ,கடலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியானசாமுண்டி பள்ளத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு சிறிய அளவில் தடுப்பணை கட்டியது.
பின்னர் அதனை 5 அடி தடுப்பு சுவராக எழுப்பி தண்ணீரை தேக்கியது. தற்போது 5 அடியாக உள்ள சுவரை 12 அடியாகஉயர்த்தி ஆந்திர அரசு கட்டி வருகிறது.
ஆந்திர எல்லையிலிருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் பாலாற்றில் வழிந்தோடும் நீரை நம்பித்தான் தமிழகபகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது.
தற்போது 5 அடியாக இருந்த தடுப்பு சுவர் 12 அடிக்கும் மேலாக உயர்த்தி ஆந்திர அரசு கட்டி வருவதால் பாலாற்றில்வழிந்தோடும் தண்ணீரும் நின்று விடும் என்று தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே, பொகிலிரே என்ற இடத்திலும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு மேலும் ஒரு தடுப்பு அணையை கட்டதிட்டமிட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் தமிழக விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.